/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வாங்கல் சாலையில் துர்நாற்றத்தால் அவதி
/
வாங்கல் சாலையில் துர்நாற்றத்தால் அவதி
ADDED : ஜூலை 30, 2025 01:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்,  கரூர்-வாங்கல் சாலை வழியாக, நாமக்கல் மாவட்டம், மோகனுார், திருச்சி மாவட்டம் காட்டுபுத்துார் பகுதிகளுக்கு பஸ், லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்கின்றன. வாங்கல் சாலையில் கடந்த சில நாட்களாக, அதிகளவில் குப்பை தேங்கியுள்ளது.
குறிப்பாக இறைச்சி, மருத்துவ கழிவுகள் குவிந்துள்ளது. மேலும், சாலையில் குவிந்துள்ள குப்பை காற்றில் பறப்பதால், வாகன ஓட்டிகள் தடுமாறுன்றனர். குறிப்பாக, வாங்கப்பாளையம் பிரிவு சாலையில் குவிந்துள்ள குப்பைகளை, உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

