/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கட்டளை நீரேற்று நிலையங்களுக்கு செல்லும் சேதமடைந்த சாலைகளால் அவதி
/
கட்டளை நீரேற்று நிலையங்களுக்கு செல்லும் சேதமடைந்த சாலைகளால் அவதி
கட்டளை நீரேற்று நிலையங்களுக்கு செல்லும் சேதமடைந்த சாலைகளால் அவதி
கட்டளை நீரேற்று நிலையங்களுக்கு செல்லும் சேதமடைந்த சாலைகளால் அவதி
ADDED : அக் 16, 2024 01:05 AM
கரூர், அக். 16-
கரூர் அருகே காவிரியாற்றில் உள்ள, நீரேற்று நிலையங்களுக்கு செல்லும் சாலைகள் சேதமடைந்து பல மாதங்களாகிறது. இதனால் பணிபுரியும் தொழிலாளர்கள்
சிரமப்படுகின்றனர்.
மேட்டூர் அணையில் இருந்து, காவிரியாற்றில் சில ஆண்டுகளுக்கு முன்பு, வினாடிக்கு இரண்டு லட்சம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது. அதே சமயத்தில், திருப்பூர் உடுமலை பேட்டை, அமராவதி அணையில் இருந்தும், உபரி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் காவிரியாற்றில், இரண்டு லட்சத்து, 25 ஆயிரம் கன அடி தண்ணீர் வரை சென்றது.
அப்போது, கரூர் அருகே கட்டளை பகுதியில், காவிரியாற்றில் கட்டப்பட்டுள்ள, உள்ளாட்சி அமைப்புகளின், பல நீரேற்று நிலையங்கள் தண்ணீரில் மூழ்கியது. மின் மோட்டார்கள், சாலைகள் சேதம் அடைந்தன. பிறகு மேட்டூர் அணை, அமராவதி அணைகளில் இருந்து, திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவு, படிப்படியாக குறைக்கப்பட்டது.
ஆனால், மாயனுார் கதவணையில் தண்ணீர் தேக்கி வைப்பதால், நீரேற்று நிலையங்களை சுற்றி தண்ணீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படாததால், இரவு மற்றும் பகல் நேர பணிகளில் ஈடுபடுவோர் தண்ணீரில் இறங்கி செல்லும் அவல நிலை ஏற்படுகிறது. மேலும், நீரேற்று நிலையம் வரை வாகனங்கள் செல்ல முடியாமல், முட்புதர்கள் முளைத்துள்ளது.
இதனால், கட்டளை காவிரியாற்று பகுதிகளுக்கு குளிக்க செல்லும் பொதுமக்களுக்கும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, கட்டளையில் உள்ள நீரேற்று நிலையங்களுக்கு செல்லும் சாலைகளை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.