ADDED : ஏப் 26, 2026 05:29 AM
அ நிறம் | அளவு
கரூர்:கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு பாலம் அருகில் அமராவதி பாசன வாய்க்கால் செல்கிறது. இங்கு, அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்கும் போது தண்ணீர் செல்லும். இந்த பகு-திகளில் செயல்படும், கோழி இறைச்சி கடை-களில் இருந்து கழிவுகளை கொண்டு வந்து, வாய்க்காலில் கொட்டுகின்றனர்.
இதன்காரணமாக வாய்க்கால் தண்ணீர் சீராக செல்ல முடியாத சூழல் ஏற்படுவதோடு, துர்நாற்றம் வீசுகிறது. எனவே, கோழி, இறைச்சி கழிவுகள் கொட்டுவதை தடுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
