/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமான சாலையால் அவதி
/
கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமான சாலையால் அவதி
ADDED : நவ 30, 2024 01:04 AM
கற்கள் பெயர்ந்து குண்டும்
குழியுமான சாலையால் அவதி
குளித்தலை, நவ. 30-
கற்கள் பெயர்ந்து, குண்டும் குழியுமான சாலையை சரி செய்ய கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குளித்தலை அடுத்த, நல்லுார் பஞ்., பஸ் நிறுத்தம் இந்திரா காலனி நகரில், 100க்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில், 20 ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலை அமைக்கப்பட்டது.
தற்போது முற்றிலும் சேதம் ஏற்பட்டு, கற்கள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக இருந்து வருகிறது. பொது மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது.
இந்த கிராமத்திற்கு ஆம்புலன்ஸ், வாகனங்கள் வந்து செல்ல முடியவில்லை. பஞ்., யூனியன் நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. கிராம மக்கள் நலன் கருதி எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி., தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து, புதிய தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

