/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பாசன வாய்க்காலில் கழிவுநீர் சுகாதார சீர்கேட்டால் தவிப்பு
/
பாசன வாய்க்காலில் கழிவுநீர் சுகாதார சீர்கேட்டால் தவிப்பு
பாசன வாய்க்காலில் கழிவுநீர் சுகாதார சீர்கேட்டால் தவிப்பு
பாசன வாய்க்காலில் கழிவுநீர் சுகாதார சீர்கேட்டால் தவிப்பு
ADDED : மார் 03, 2024 01:12 AM
கரூர்:பாசன வாய்க்காலில், கலக்கும் கழிவு நீரை தடுத்து நிறுத்திட வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.கரூர் ராயனுாரில் இருந்து, செல்லாண்டிபாளையம் செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலையின் ஒருபுறம் குடியிருப்புகளும், மறுபுறம் விவசாய நிலங்களும் உள்ளன. இங்கிருந்து சுங்ககேட் பகுதிக்கு செல்லும் பாசன வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலில் எந்த சுத்திகரிப்பு செய்யப்படாமல் சாக்கடை மற்றும் சாயகழிவுகள் கலக்கப்படுகிறது.
இதனால், வாய்க்காலில் நீரோட்டம் தடைபட்டு, கழிவுநீர் அனைத்தும் சாலைகளிலும் அருகில் உள்ள பாசன நிலங்களிலும் வழிந்தோடுகிறது. இதனால், பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு வருவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, பாசன வாய்க்காலில் கழிவு நீர் கலக்காத வகையில், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.