ADDED : நவ 20, 2026 04:00 AM
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் சர்க்கரைவள்ளி கிழங்கு சாகுபடி பணி துவங்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணராயபுரம்
ஒன்றியத்திற்கு உட்பட்ட சேங்கல், வீரியபாளையம், சிவாயம்,
பாப்பகாப்பட்டி, குழந்தைப்பட்டி, கோடங்கிப்பட்டி, வரகூர்,
மேட்டுப்பட்டி, மலையாண்டிப்பட்டி, கொசூர், முத்தம்பட்டி ஆகிய
பகுதிகளில் பரவலாக சர்க்கரைவள்ளி கிழக்கு சாகுபடி
செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம், நிலங்களில் உழவு பணி செய்து
சமன்படுத்தப்பட்டு, கிழங்கு செடி நாற்று நடவு பணி நடந்தது.
தற்போது
செடிகள் அனைத்தும் முளைத்து வளர்ச்சி கண்டுள்ளது. கிணற்று நீர் பாசன
முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. இந்த சாகுபடி மூலம்
விவசாயிகளுக்கு ஓரளவு வருமானம் கிடைக்கிறது. செலவு குறைவு
என்பதால், விவசாயிகள் சர்க்கரைவள்ளி கிழங்கு சாகுபடிக்கு
முக்கியத்துவம் அளித்துள்ளனர்.
