/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சுக்காலியூரில் நிழற்கூடம் இல்லாததால் அவதி
/
சுக்காலியூரில் நிழற்கூடம் இல்லாததால் அவதி
ADDED : ஜூன் 18, 2024 07:24 AM
கரூர் : கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுக்காலியூரில், வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகள் உள்ளது.
மேலும், சுக்காலியூர் பஸ் ஸ்டாப்பில் இருந்து அத்திப்பாளையம், செட்டிப்பாளையம், கருப்பம்பாளையம் உள்ளிட்ட, பல்வேறு கிராம பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்கின்றனர். ஆனால், சுக்காலியூர் பஸ் ஸ்டாப்பில் இரண்டு பக்கமும் உள்ள, பஸ் ஸ்டாப்பில் நிழற்கூடம் இல்லை.கரூர் மாவட்டத்தில், வெயில் தாக்கம் அதிகம் உள்ள நிலையில், அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. நிழற்கூடம் இல்லாததால், பொதுமக்கள் மழை வரும் போதும், வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள போதும், கடைகளில் தஞ்சம் புகுகின்றனர். எனவே, சுக்காலியூரில் பயணிகள் நிழற்கூடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

