/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாவட்டத்தில் தொடரும் கோடை மழை
/
கரூர் மாவட்டத்தில் தொடரும் கோடை மழை
ADDED : மே 10, 2025 12:59 AM
கரூர், கரூர் மாவட்டத்தில், நேற்று அதிகாலை வரை பல்வேறு இடங்களில் மழை பெய்தது.
தெற்கு அந்தமானையொட்டி, வங்க கடலில் தென்மேற்கு பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் கடந்த, 8ல் அறிவித்திருந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை முதல் கரூர் மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் வானம் மேக
மூட்டமாக இருந்தது. பிறகு, மாலையில் கரூர் மாவட்டத்தில் பல இடங்களில் மழை பெய்தது. சில பகுதிகளில், நேற்று அதிகாலை வரை மழை நீடித்தது. கரூர் மாவட்டத்தில், நேற்று காலை, 8:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (மி.மீ.,) கரூர், 2.60, மாயனுார், 1.20, கடவூர், 21, பாலவிடுதி, 19 மி.மீ., மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 3.65 மி.மீ., மழை பதிவானது.