ADDED : மே 06, 2025 02:03 AM
கரூர்:கரூர் மாவட்டத்தில், நேற்று அதிகாலை வரை பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்தது.
தமிழகம் உள்ளிட்ட, தென் மாநில பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திப்பு நடக்கிறது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும், 8
வரை மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் நேற்று முன்தினம் அறிவித்திருந்தது.
கோடைகாலத்தில், நேற்று அக்னி நட்சத்திரம் தொடங்கியதையொட்டி கரூர் மாவட்டத்தில், காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்தது. பிறகு, மதியம் முதல் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது.
இரவு, 11:30 மணிக்கு கரூர் மாவட்டம் முழுவதும், பல்வேறு இடங்களில் கோடை மழை பரவலாக பெய்தது. மழை நேற்று அதிகாலை வரை நீடித்தது.
கரூர் மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விபரம் (மி.மீ.,) கரூர், 8.80, அரவக்குறிச்சி, 10, அணைப்பாளையம், 22, க.பரமத்தி, 13.50, பஞ்சப்பட்டி, 14.60 மி.மீ., மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 6.17 மி.மீ., மழை பதிவானது.