ADDED : மே 24, 2026 05:35 AM

அ நிறம் | அளவு
கரூர்: கரூர் மாவட்ட மைய நுாலகத்தில் கோடை விடுமுறையையொட்டி, மாணவ, மாணவியருக்கு சிறப்பு பயிற்சி முகாம் நேற்று நடந்தது.
அதில், 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியருக்கு கலை மற்றும் கைவினை பொருட்கள் தயாரிப்பது குறித்து, கைவினை ஆசிரியர் லதா பயிற்சி அளித்தார். பிறகு, அனைவருக்கும் பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மாவட்ட மைய நுாலகர் மேரி ரோசரி சாந்தி, நுாலகர் சுகன்யா உள்பட பலர் பங்கேற்றனர். இன்று காலை, ஓவியப்பயிற்சி முகாம் நடக்கிறது.
