ADDED : மே 26, 2026 04:32 AM
அ நிறம் | அளவு
அரவக்குறிச்சி அரவக்குறிச்சி கிளை நுாலகத்தில், பள்ளி மாணவர்களுக்கு கணினி மற்றும் ஓவியம் தொடர்பாக கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற்றது.
தமிழக அரசு நுாலகத்துறை மற்றும் கரூர் மாவட்ட நுாலகம் சார்பில், அரவக்குறிச்சி கிளை நுாலகத்தில் மாணவர்களுக்கான கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் அரவக்குறிச்சி ஆர்.சி. அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளியை சேர்ந்த, 30-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அடிப்படை கணினி பயிற்சி மற்றும் ஓவிய பயிற்சி வழங்கப்பட்டது. இதில் மாணவர்கள் ஆர்வமுடன் பயிற்சி பெற்றனர்.
பயிற்சியில் ஈடுபட்ட மாணவர்கள், நுாலக உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். மேலும் மைக்கேல்ராஜ் என்பவர் நுாலக புரவலராகவும் சேர்க்கப்பட்டார். பயிற்சிக்கான ஏற்பாடுகளையும், மாணவர்களுக்கு பயிற்சியையும் கிளை நுாலகர் இளைய சபரி செய்திருந்தார்.
