கவுண்டம்பாளையம் பள்ளியில் கோடையை வரவேற்று நிகழ்ச்சி
கவுண்டம்பாளையம் பள்ளியில் கோடையை வரவேற்று நிகழ்ச்சி
ADDED : மார் 24, 2026 05:28 AM
கரூர், கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியம், கவுண்டம்பாளையம் தொடக்கப் பள்ளியில், கோடை காலத்தை வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது.
தலைமை ஆசிரியர் பரணிதரன், கோடை காலத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என மாணவர்களுக்கு கூறினார். அதில், கோடைகாலத்தில், 15 நாட்களுக்கு ஒரு முறை மருதாணி வைத்து கொள்வது நல்லது. தர்பூசணி, முலாம்பழம் போன்ற பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும். இளநீர், கம்மங்கூழ், மோர், பழைய சோறு, அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். பழரசங்களை வீட்டிலேயே தயாரித்து குடிக்க மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது, பாட்டிலில் அடைத்து வைக்கப்பட்டுள்ள குளிர்பானங்களை குடிக்க வேண்டாம். காலை, மாலை இரண்டு முறை குளிர்ந்த தண்ணீரில் குளிக்கவும்
அறிவுறுத்தப்பட்டது.
நிகழ்ச்சியை ஆசிரியர்கள் தெரசா ராணி, ஜெயபாரதி, சுமதி மற்றும் நந்தினி பிரியா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
