ADDED : ஆக 08, 2025 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் பகுதியில், சூரியகாந்தி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சப்பட்டி, வீரியபாளையம், சிவாயம், வயலுார், சரவணபுரம், குழந்தைப்பட்டி, வரகூர், மேட்டுப்பட்டி, பாப்பகாப்பட்டி, தேசியமங்களம், காட்டூர், செக்கணம், கந்தன்குடி பகுதியில் சூரியகாந்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. தற்போது சூரியகாந்தி செடிகளில், விதைகள் பிடித்து வருகிறது. இந்த முறை சாகுபடி மூலம், ஓரளவு மகசூல் இருக்கும் என விவசாயிகள் கூறினர். கிருஷ்ணராயபுரம் பகுதியில், 60 ஏக்கர் பரப்பளவில் சூரியகாந்தி சாகுபடி செய்யப்ட்டுள்ளது.