/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கோவக்குளம் மருத்துவமனையில் மருத்துவ உபகரணம் வழங்கல்
/
கோவக்குளம் மருத்துவமனையில் மருத்துவ உபகரணம் வழங்கல்
கோவக்குளம் மருத்துவமனையில் மருத்துவ உபகரணம் வழங்கல்
கோவக்குளம் மருத்துவமனையில் மருத்துவ உபகரணம் வழங்கல்
ADDED : நவ 09, 2024 04:01 AM
கிருஷ்ணராயபுரம்: கோவக்குளம், அரசு மருத்துவமனைக்கு கரூர் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம், மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கரூர் மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் செழியன் தலைமை வகித்தார். ஏழை, எளிய மக்கள் செலவு இல்-லாமல், மருத்துவ வசதி கிடைக்கும் வகையில் கரூர் எம்.பி., தொகுதி மேம்பாடு நிதியில் இருந்து, கண் அறுவை சிகிச்சை சம்-பந்தமாக, 3.89 ரூபாய் லட்சம் மதிப்பில் மருத்துவ உபகர-ணங்கள் வாங்கி தரப்பட்டது. இதை எம்.பி., ஜோதிமணி நேரில் வழங்கினார்.
கோவக்குளம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் அருண், கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து தலைவர் சேது-மணி, கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் கிருஷ்ணன், வார்டு கவுன்சிலர்கள், மருத்துவ அலுவலர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.