ADDED : நவ 23, 2026 06:59 AM

அ நிறம் | அளவு
கரூர்:கரூர்
மாவட்டம், சோமூரில், 400க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து
வருகின்றனர். இவர்களுக்கு, பஞ்., நிர்வாகம் சார்பில், போர்வெல்
அமைத்து, சின்டெக்ஸ் தொட்டி மூலம் தண்ணீர் வினியோகம் செய்து
வருகின்றனர்.
இந்நிலையில், சின்டெக்ஸ் தொட்டியை சுற்றி சீமை
கருவேல மரங்கள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. மின் மோட்டாரை
இயக்க அமைக்கப்பட்ட, 'சுவிட்ச்' போர்டும் சேதமடைந்துள்ளது. இதனால்,
அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் தண்ணீர் பிடிக்க முடியாமல்
சிரமப்படுகின்றனர்.
எனவே, சோமூர் பஞ்., நிர்வாகம், சின்டெக்ஸ்
தொட்டியை சுற்றி முளைத்துள்ள முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க
வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
