/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ம.தி.மு.க., நிர்வாகிகள் அ.தி.மு.க.,வுக்கு தாவல்
/
ம.தி.மு.க., நிர்வாகிகள் அ.தி.மு.க.,வுக்கு தாவல்
ADDED : பிப் 22, 2024 07:28 AM
கரூர் : கரூர் மாவட்டத்தை சேர்ந்த, ம.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் நேற்று, அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.
கரூர் மாநகர ம.தி.மு.க., செயலர் கபினி பாலச்சந்திரன், மாவட்ட இளைஞர் அணி செயலர் கோபி, துணை செயலர் கனகராஜ், மாவட்ட பிரதிநிதி மாரியப்பன் உள்ளிட்ட, 100க்கும் மேற்பட்ட ம.தி.மு.க.,வினர் நேற்று, அ.தி.மு.க., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் முன்னிலையில், அக்கட்சியில் இணைந்தனர். மேலும், தே.மு.தி.க., - அ.ம.மு.க., நிர்வாகிகள் சிலரும், அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.
அப்போது, மாவட்ட அ.தி.மு.க., துணை செயலர் ஆலம் தங்கராஜ், ஒன்றிய செயலர் கிருஷ்ணன் உள்பட பலர் உடனிருந்தனர்.