தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ 'தாட்கோ' சார்பில் அழகுக்கலை பயிற்சி: விண்ணப்பிக்க அழைப்பு

'தாட்கோ' சார்பில் அழகுக்கலை பயிற்சி: விண்ணப்பிக்க அழைப்பு

'தாட்கோ' சார்பில் அழகுக்கலை பயிற்சி: விண்ணப்பிக்க அழைப்பு


ADDED : பிப் 22, 2026 07:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 22, 2026 07:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: கரூர் கலெக்டர் தங்கவேல் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஒப்பனை மற்றும் அழகுக்கலை பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு, எட்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படித்தவராக இருக்க வேண்டும். 18 முதல், 35 வயது வரையும், குடும்ப வருமானம் ஆண்டிற்கு, 3 லட்சம் ரூபாயாக இருக்க வேண்டும்.

இப்பயிற்சிக்கான கால அளவு, 90 நாட்கள் ஆகும். தங்கும் வசதி, உணவு உட்பட செலவின தொகை தாட்கோவால் ஏற்கப்படும்.இப்பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபர்களை பயிற்சியளிக்கும் நிறுவனம் மூலமாக தேர்வு செய்து, அந்நிறுவனம் சார்பில் ஆரம்பகால மாத ஊதியமாக, 18,000 முதல், 25,000 ரூபாய் வரையுடன் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். ஆர்வமுள்ளவர்கள், www.tahdho.com என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us