ADDED : ஜூலை 03, 2026 04:26 AM
அ நிறம் | அளவு
குளித்தலை: குளித்தலை புதிய தாசில்தாராக சந்தானசெல்வன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் குளித்தலை சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக பணிபுரிந்து, பணி மாறுதலாகி பொறுப்பேற்றுக் கொண்டார்.
இங்கு
தாசில்தாராக பணிபுரிந்து வந்த இந்துமதி, குளித்தலை காவிரி வைகை
குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டம் அலகு-3 தனி தாசில்தாரராக
இடமாற்றம் செய்யப்பட்டு பொறுப்பேற்றார்.
தேர்தல் தனி தாசில்தார்
ஜெயவேல், மண்டல துணை தாசில்தார் நீதிராஜன், தலைமை இடத்து துணை தாசில்தார்
தீபத்திலகை, டி.எஸ்.ஓ., வைரபெருமாள், ஆர்.ஐ.,க்கள் குளித்தலை
தமிழரசி, நங்கவரம் சுகப்பிரியா, தோகைமலை அரவிந்த் மற்றும்
வி.ஏ.ஓ.,க்கள், கிராம உதவியாளர்கள், அலுவலக பணியாளர்கள் நேரில்
சந்தித்து வாழ்த்து
தெரிவித்தனர்.
