ADDED : அக் 30, 2025 02:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன வளாகத்தில், ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. முதன்மை மேலாளர் (மனித வளம்) வெங்கடேசன் தலைமை வகித்தார்.
இந்தியா முழுவதும் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம், அக்., 27 முதல் நவ., 2 வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு ஒருமைப்பாட்டு உறுதிமொழியை நிறுவன பணியாளர்கள் ஏற்று கொண்டனர்.நிகழ்ச்சியில் விழிப்புணர்வு துறை அலுவலர் ஜெகநாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.

