/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குண்டும் குழியுமான தார்ச்சாலை தமிழர் தேசம் கட்சியினர் சாலை மறியல்
/
குண்டும் குழியுமான தார்ச்சாலை தமிழர் தேசம் கட்சியினர் சாலை மறியல்
குண்டும் குழியுமான தார்ச்சாலை தமிழர் தேசம் கட்சியினர் சாலை மறியல்
குண்டும் குழியுமான தார்ச்சாலை தமிழர் தேசம் கட்சியினர் சாலை மறியல்
ADDED : டிச 08, 2024 01:54 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த அய்யர்மலை - பணிக்கம்பட்டி செல்லும் சாலை, கடந்த, 2 ஆண்டுகளுக்கு மேலாக குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக காணப்பட்டது. இந்த தார்ச்சாலையை சீரமைத்து தராத யூனியன் நிர்வாகத்தை கண்டித்து, தமிழர் தேசம் கட்சி சார்பில், சாலை மறியல் செய்த பின்னர், விளக்க கூட்டம் நடத்தினர். தமிழர் தேசம் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் குருமணிகண்டன் தலைமை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் மகுடேஸ்வரன், மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பேசினார்.
அப்போது, குளித்தலை டி.எஸ்.பி., செந்தில்குமார், தாசில்தார் இந்துமதி, யூனியன் கமிஷனர் விஜயகுமார், இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோர், தமிழர் தேசம் கட்சியின் தலைமை மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் கட்சி பொறுப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சேதமடைந்த அய்யர்மலை - பணிக்கம்பட்டி தார்ச்சாலையை, 2.20 கோடி ரூபாயில் புதிய சாலை அமைத்து தரப்படும் என, உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
அப்போது, மார்ச்சில் புதிய தார்ச்சாலை அமைக்காவிட்டால், கலெக்டர் அலுவலகம் முன் அரை நிர்வாண போராட்டம் நடத்தப்படும். காலம் நீட்டிப்பு செய்தால், தமிழர் தேசம் கட்சி சார்பில் பிச்சை எடுத்து தார்ச்சாலை அமைக்க வேண்டிய நிலை ஏற்படும் என, தெரிவித்தனர்.