/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தமிழ் வளர்ச்சி துறை பேச்சு போட்டி ஏப்.,30க்குள் பதிவு செய்ய அழைப்பு
/
தமிழ் வளர்ச்சி துறை பேச்சு போட்டி ஏப்.,30க்குள் பதிவு செய்ய அழைப்பு
தமிழ் வளர்ச்சி துறை பேச்சு போட்டி ஏப்.,30க்குள் பதிவு செய்ய அழைப்பு
தமிழ் வளர்ச்சி துறை பேச்சு போட்டி ஏப்.,30க்குள் பதிவு செய்ய அழைப்பு
ADDED : ஏப் 27, 2025 04:18 AM
கரூர்: 'தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் நடக்கும் பள்ளி, கல்லுாரிக-ளுக்கான பேச்சு, கட்டுரை போட்டிகளில் பங்கேற்க, ஏப்., 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.
அவர், வெளியிட்ட அறிக்கை:முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மாணவ, மாணவியருக்கு போட்-டிகள் நடந்தப்பட்டு வருகின்றன. கரூர் தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லுாரியில், மே 9, 10 ஆகிய நாட்களில், பிளஸ் 1, 2, மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியருக்கு கட்டுரை, பேச்சு போட்டிகள் நடக்கின்றன.
இப்போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவர்கள் பதிவு செய்யும் படிவங்களை, தமிழ் வளர்ச்சித் துறையின் https:// tamilvalarchithurai.tn. gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ அல்லது கரூர் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரடியாக பெற்றுக்கொள்ளலாம்.
வரும் ஏப்., 30க்குள் நேரில் பதிவு செய்ய வேண்டும். இப்-போட்டியில், அரசு, அரசு உதவிபெறும் பள்ளி, சி.பி.எஸ்.இ., பள்ளி ஆகிய மாணவ, மாணவியர் பங்குபெறலாம்.
கல்லுாரி போட்டிகளில் கலை மற்றும் அறிவியல், கல்வியியல், பொறியியல், பல்தொழில்நுட்பம், மருத்துவம், சட்டம், வேளாண் உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் கல்லுாரி மாணவ, மாணவியர் கலந்துகொள்ளலாம்.
மாவட்ட போட்டிகளில் முதல் பரிசுபெறும் மாணவர் வரும் மே 17ல் சென்னையில் நடக்கும் மாநில போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு பெறுவர்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.