/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள்கரூரில் தர்ணா போராட்டம்
/
தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள்கரூரில் தர்ணா போராட்டம்
தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள்கரூரில் தர்ணா போராட்டம்
தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள்கரூரில் தர்ணா போராட்டம்
ADDED : ஏப் 18, 2025 02:30 AM
கரூர்:கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் செல்வராணி தலைமை வகித்தார். தேர்தல் வாக்குறுதிப்படி, காலமுறை ஊதியம் மற்றும் பணி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம், பணிக்கொடை வழங்க வேண்டும். மகப்பேறு விடுப்பு அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல், 12 மாதம் ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். ஓய்வு பெறும் நாளிலேயே பணப்பலன்களை வழங்க வேண்டும். காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் செயல்படுத்த வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச மாத ஓய்வூதியம், 9,000 ரூபாய் வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர்.
போராட்டத்தில் மாவட்ட செயலாளர் சிவகாமி, மாவட்ட பொருளாளர் தனலட்சுமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் தமிழ்மணி உள்பட பலர் பங்கேற்றனர்.

