/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தமிழகத்தில் கள் இறக்க அனுமதிக்க வேண்டும்: கொ.ம.தே.க., கோரிக்கை
/
தமிழகத்தில் கள் இறக்க அனுமதிக்க வேண்டும்: கொ.ம.தே.க., கோரிக்கை
தமிழகத்தில் கள் இறக்க அனுமதிக்க வேண்டும்: கொ.ம.தே.க., கோரிக்கை
தமிழகத்தில் கள் இறக்க அனுமதிக்க வேண்டும்: கொ.ம.தே.க., கோரிக்கை
ADDED : ஜன 06, 2024 10:44 AM
கரூர்: ''தமிழகத்தில், கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும்,'' என, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலரும், எம்.எல்.ஏ.,வுமான ஈஸ்வரன் தெரிவித்தார்.
கரூரில், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் பிப்., 4ல் மாநில மாநாடு நடக்கிறது. அதில், 12 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும், வள்ளி கும்மி உலக சாதனை நிகழ்ச்சி நடக்கிறது. வள்ளி கும்மி நிகழ்ச்சியை தடை செய்யக்கோரி, சில அமைப்புகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். அதை வன்மையாக கண்டிக்கிறோம்.
எம்.பி., தேர்தல் தொடர்பாக, தி.மு.க.,விடம் பேச்சுவார்த்தை தொடங்கவில்லை. ஊடகங்கள்தான் தவறான செய்தியை வெளியிடுகிறது. எம்.பி., தேர்தல் தேதி அறிவிப்புக்கு பிறகு, மாநில பொதுக்குழு தீர்மானத்தின்படி, எத்தனை தொகுதிகள் தேவை என்பது குறித்து பேசுவோம்.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது, அதிபர் ஆட்சிக்கு முறைக்கு வழி வகுக்கும். அந்த அமைப்பு, இந்தியாவுக்கு ஒத்துவராது. ஒரே நாடு ஒரே தேர்தல் நடைபெற சாத்தியம் இல்லை. கங்கை-காவிரி இணைப்பு, கோதாவரி இணைப்பு போன்ற, பா.ஜ.,வின் கடந்த கால தேர்தல் அறிவிப்புகள் கிடப்பில் உள்ளன. தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, உண்மை தெரியாமல் பேசுகிறார்.
சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கு, மத்திய அரசு உரிய நிவாரணம் தர வேண்டும். கள் மீதான தடையை நீக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். அது குறித்து, சட்டசபையில் தொடர்ந்து பேசுவோம். தமிழக அரசு கள் மீதான, தடையை உடனடியாக நீக்கி, கள் இறக்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.மாநில வர்த்தக அணி செயலர் விசா சண்முகம் உடனிருந்தார்.