/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தரகம்பட்டி அரசு கலை கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட முகாம்
/
தரகம்பட்டி அரசு கலை கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட முகாம்
தரகம்பட்டி அரசு கலை கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட முகாம்
தரகம்பட்டி அரசு கலை கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட முகாம்
ADDED : மார் 15, 2024 04:02 AM
கரூர்: கரூர் மாவட்டம் கடவூர் அருகே தரகம்பட்டி அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட தொடக்கவிழா மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கு நிறைவு விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் ஹேமா நளினி தலைமை வகித்தார். துணை கலெக்டர் கருணாகரன், போதைபொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கி பேசினார்.
தொடர்ந்து 7 நாள் நடந்த நாட்டு நலப்பணி திட்ட முகாமில் அரசு நடுநிலைப்பள்ளிகள், கோவில்கள், தெருக்கள், குளங்கள் போன்ற பொது இடங்களில் சுகாதார பணிகளை மாணவர்கள் செய்தனர்.
நாட்டு நலப்பணிகள் திட்ட அலுவலர் பாலுசாமி, கல்லுாரி தமிழ் தலைவர் பாலுசாமி, வணிகவியல் துறை தலைவர் பாலகிருஷ்ணன், கணிணி அறிவியல் துறை தலைவர் மணிவாசகம் உள்பட பலர் பங்கேற்றனர்.