ADDED : ஏப் 16, 2026 06:02 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம் : தரகம்பட்டி பஸ் ஸ்டாண்ட் மோசமான நிலையில் உள்ளதால், மக்கள் அவதிப்படுகின்றனர்.
தரகம்பட்டி வழியாக கடவூர், கரூர், மணப்பாறை, குளித்தலை ஆகிய பகுதிகளுக்கு கிராம மக்கள் பஸ்களில் செல்கின்றனர். தரகம்பட்டி மையத்தில் உள்ள, பஸ் ஸ்டாண்ட் தற்போது போதுமான அடிப்படை வசதிகள் இன்றி, மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. திறந்த வெளி கழிப்பிடமாக பஸ் நிறுத்தம் இடம் மாறியுள்ளது.
இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் துர்நாற்றம் வீசுகிறது. கிராம மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, தரகம்பட்டி பஸ் ஸ்டாண்டை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை, பஞ்சாயத்து நிர்வாகம் எடுக்க வேண்டும்.
