கிருஷ்ணராயபுரம் நெடுஞ்சாலையில் தார்ச்சாலை அமைக்கும் பணி ஜரூர்
கிருஷ்ணராயபுரம் நெடுஞ்சாலையில் தார்ச்சாலை அமைக்கும் பணி ஜரூர்
ADDED : மே 24, 2026 05:31 AM

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் நெடுஞ்சாலையில், புதிய தார் சாலை அமைக்கும் பணி துரிதமாக நடந்தது.
கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில், கிருஷ்ணராயபுரம் பகுதியில் தற்போது நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலை பராமரிப்பு பணி நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக கிருஷ்ணராயபுரம் பஸ் ஸ்டாப் பகுதி, தாலுகா அலுவலகம், யூனியன் அலுவலகம் ஆகிய பகுதிகளில் பழைய நெடுஞ்சாலையை பொக்லைன் இயந்திரம் கொண்டு சாலை பராமரிப்பு பணிக்காக பறிக்கப்பட்டது.
தொடர்ந்து பறிக்கப்பட்ட இடத்தில் துாய்மை பணி செய்யப்பட்டது. நேற்று காலை முதல் கிருஷ்ணராயபுரம் நெடுஞ்சாலை பகுதி முழுவதும், புதிய தார் சாலை அமைக்கும் பணி துரிதமாக நடந்தது. இதற்காக ஜல்லி கற்கள் கலந்த கலவை கொண்டு சமன்படுத்தப்பட்டது. தொடர்ந்து புதிய தார் சாலை சீரான வெப்பநிலையில் இருக்கும் வகையில் உலர்த்தப்பட்டது. இதன் மூலம் தார் சாலை நீண்ட நாட்களுக்கு தாக்கு பிடிக்கும் வகையில் பணி நடந்தது.
