/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலை நகராட்சியில் ரூ.3.79 கோடியில் 6.21 கி.மீ., துாரத்திற்கு தார்ச்சாலை பணி

ADDED : ஜூலை 13, 2025 01:28 AM
குளித்தலை, குளித்தலை நகராட்சியில், நான்கு ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதில், குளித்தலை நகராட்சியில், 3.79 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 6.21 கி.மீ., நீளத்திற்கு தார்ச்சாலை அமைக்கும் பணி நடக்கிறது. 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அறிவுசார் மையம் மற்றும் நுாலகம் கட்டப்பட்டு வருகிறது. 54 லட்சம் ரூபாய் மதிப்பில், திடக்கழிவு மேலாண்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், 1.84 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 4.58 கி.மீ., தார்ச்சாலை மற்றும் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டு வருகிறது.
புதிய தெரு விளக்குகள், 28 லட்சம் ரூபாயில் அமைக்கும் பணி நடக்கிறது. மாநில உள்கட்டமைப்பு நிதியில் இருந்து, 1.25 கோடி ரூபாயில் அனைத்து வார்டுகளில் மின் சிக்கனத்தை கருத்தில் கொண்டு, எல்.இ.டி.,விளக்குகள் பொருத்தப்பட்டு வருகின்றன.
துாய்மை இந்திய திட்டத்தில், சமுதாய கழிப்பறை கட்டுதல், பொது கழிப்பறை மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கழிவுநீர் அகற்றும் வாகனம், 43 லட்சம் ரூபாயில் வாங்க திட்டமிடப்பட்டு வருகிகறத. மூன்று எம்.எல்.டி., சுத்தகரிப்பு திறன் கொண்ட சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி நடக்க உள்ளது.