/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டாஸ்மாக் பாரில் டேபிள், சேர் உடைப்பு: 4 பேர் மீது வழக்கு
/
டாஸ்மாக் பாரில் டேபிள், சேர் உடைப்பு: 4 பேர் மீது வழக்கு
டாஸ்மாக் பாரில் டேபிள், சேர் உடைப்பு: 4 பேர் மீது வழக்கு
டாஸ்மாக் பாரில் டேபிள், சேர் உடைப்பு: 4 பேர் மீது வழக்கு
ADDED : மார் 14, 2024 06:57 AM
கரூர் : கரூர் டாஸ்மாக் பாரில், டேபிள், சேரை உடைத்த நான்கு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கரூர் தளவாப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 42; இவர், கரூர் பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள, பாலாஜி டாஸ்மாக் பாரில் வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு கரூர் கட்டளையை சேர்ந்த மோகன்தாஸ், கார்த்திக் உள்ளிட்ட நான்கு பேர், டாஸ்மாக் பாருக்கு சென்று மதுபாட்டில்களை கேட்டுள்ளனர்.அப்போது, பாரில் இருந்த ராமகிருஷ்ணன், நேரம் ஆகிவிட்டதால் மதுபாட்டில்களை தர முடியாது என கூறியுள்ளார். ஆத்திரம் அடைந்த மோகன்தாஸ் உள்ளிட்ட நான்கு பேரும் பாரில் இருந்த டேபிள், சேர்களை உடைத்து விட்டு, பீர் பாட்டிலை காட்டி ராமகிருஷ்ணனை மிரட்டியுள்ளனர். இது குறித்து, ராமகிருஷ்ணன் கொடுத்த புகார்படி, கரூர் டவுன் போலீசார் மோகன்தாஸ் உள்ளிட்ட, நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.