/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 25, 2025 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்,கரூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள், அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில், தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், தொழிற்பேட்டை டாஸ்மாக் குடோன் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், காலி மதுபாட்டில்களை திரும்ப பெற ஊழியர்களை நிர்பந்தம் செய்யக் கூடாது, டாஸ்மாக் ஊழியர்கள் மீது கூடுதல் பணிச்
சுமையை திணிக்கக் கூடாது, டாஸ்மாக் ஊழியர்களின் உயிரிழப்புகளை தடுக்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட சி.ஐ.டி.யு., தலைவர் ராஜா முகமது, செயலாளர் சுப்பிரமணி, கரூர் மாநகராட்சி கவுன்சிலர்
தண்டபாணி உள்பட, பலர் பங்கேற்றனர்.

