ADDED : ஜூன் 24, 2026 04:27 AM
அ நிறம் | அளவு
கரூர்:தமிழ்நாடு டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம், (சி.ஐ.டி.யு.,) கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை யில், தொழிற்பேட்டை டாஸ்மாக் குடோன் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், டாஸ்மாக் ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை,
தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். மாநில துணை பொதுச்செயலாளர் ஜான்
அந்தோணிராஜின், தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன
உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், சி.ஐ.டி.யு., நிர்வாகிகள் சுப்பிரமணி யம்,
ஜீவானந்தம், ராஜேந்திரன், மா.கம்யூ., கட்சி நகர செயலாளர் தண்டபாணி
உள்பட, பலர் பங்கேற்றனர்.
