ADDED : ஆக 29, 2026 06:59 AM
கரூர்,:கரூர் அருகே, தொழிற்பேட்டை டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன், டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள், தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில், டாஸ்மாக் ஊழியர்களை பணிவரன் முறைப்படுத்த வேண்டும், காலி மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டம் என்ற பெயரில், ஊழியர்களுக்கு வேலை பளு கொடுப்பதை கைவிட வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், விடுமுறை நாட்களில் இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, கரூர் அருகே தொழிற்பேட்டையில் உள்ள, டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மேலும், கரூர் மாவட்டத்தில் உள்ள, 74 மதுபான கடைகளில், 24 கடைகள் மூடப்பட்டிருந்தது. மீதமுள்ள, 50 டாஸ்மாக் மதுபான கடைகள், வழக்கம் போல செயல்பட்டது.
