/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர்- திருச்சி சாலையில் டாஸ்மாக் கடை: குடிமகன்கள் ரகளையால் பெண்கள் அச்சம்
/
கரூர்- திருச்சி சாலையில் டாஸ்மாக் கடை: குடிமகன்கள் ரகளையால் பெண்கள் அச்சம்
கரூர்- திருச்சி சாலையில் டாஸ்மாக் கடை: குடிமகன்கள் ரகளையால் பெண்கள் அச்சம்
கரூர்- திருச்சி சாலையில் டாஸ்மாக் கடை: குடிமகன்கள் ரகளையால் பெண்கள் அச்சம்
ADDED : மே 10, 2024 07:26 AM
கரூர் : கரூர் மாவட்டத்தில், 96 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. கரூர்- -திருச்சி சாலை, காந்தி கிராமம் அருகில் மேலப்பாளையம் பெட்ரோல் பங்க் எதிரில் டாஸ்மாக் கடை, ஐந்து ஆண்டாக செயல்பட்டு வந்தது. அப்பகுதி பெண்கள் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகினர். 2018ல் நீதிமன்ற உத்தரவுப்படி கடை மூடப்பட்டது. பொதுமக்களின் எதிர்ப்பை மீறி, சில மாதங்களில் மீண்டும் திறக்கப்பட்டது.
இந்த டாஸ்மாக் அமைந்துள்ள சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. கடையில் இருந்து குடித்து விட்டு வெளியே வரும் வாகன ஓட்டிகள், விபத்துகளில் சிக்கும் அபாயம் அதிகம் உள்ளது. மேலும் சாலையோரம் அமர்ந்து மது அருந்தி விட்டு, குடிமகன்கள் செய்யும் அடாவடியால், பெண்கள், குழந்தைகள் அச்சப்படுகின்றனர். மது பாட்டில், பிளாஸ்டிக் டம்ளர்களை சாலையில் வீசுகின்றனர்.
இதுமட்டுமல்லாது, சங்கிலி பறிப்பு போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களின், புகலிடமாகவும் இந்த டாஸ்மாக் கடை மாறியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. முக்கியமான சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு தரப்பினர் புகார் அளித்தும் கூட, தொடர்ந்து கடை செயல்பட்டு வருகிறது.
ஏதாவது பெரிய விபத்து அல்லது அசம்பாவித சம்பவம் நடக்கும் முன் டாஸ்மாக் கடையை அப்பகுதியில் இருந்து மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.