8 மணி நேர வேலை வழங்க வலியுறுத்தி டாஸ்மாக் விற்பனையாளர் மாநாட்டில் தீர்மானம்
8 மணி நேர வேலை வழங்க வலியுறுத்தி டாஸ்மாக் விற்பனையாளர் மாநாட்டில் தீர்மானம்
ADDED : அக் 03, 2026 06:12 AM
கரூர்:எட்டு
மணி நேர வேலை, பண்டிகை கால விடுமுறை வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு
டாஸ்மாக் விற்பனையாளர் நலச்சங்க மாநில மாநாட்டில் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர் நலச்சங்க
மாநில மாநாடு, நேற்று கரூர் தான்தோன்றிமலையில் நடந்தது. சிறப்பு
தலைவர் பாரதி தலைமை வகித்தார். கூட்டத்தில், 23 ஆண்டுகளாக பணியாற்றி
வரும் டாஸ்மாக் பணியாளர்களை, பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலமுறை
ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மதுபான கடை நேரத்தை மதியம்,
12:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை மாற்றி அமைக்க வேண்டும். 8 மணி நேர
வேலை, பண்டிகை கால விடுமுறை, ஊதியத்துடன் கூடிய விடுமுறை, வாரிசு வேலை
வழங்க வேண்டும். பணியின் போது ஊழியர்கள் உயிரிழந்தால், 25 லட்ச ரூபாய்
வழங்க வேண்டும், ஓய்வு பெறும் வயதை, 60 ஆக உயர்த்த வேண்டும் உள்பட,
பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில் மாநில செயல்
தலைவர் தங்க வேல், உழைப்போர் உரிமை இயக்க மாநில செயலாளர் சுரேஷ், கரூர்
மாவட்ட செயலாளர் பால்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.
