ADDED : மார் 25, 2026 06:48 AM
அ நிறம் | அளவு
குளித்தலை, குளித்தலை அடுத்த கூடலுார் பஞ்., சின்னராசாபட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன், 53. விவசாய கூலித் தொழிலாளி. இவரது மகன் அருண்குமார், 22, கரூரில் உள்ள தனியார் கம்பெனியில் எம்பிராய்டிங் டெய்லராக வேலை செய்து வருகிறார்.
கடந்த 6ம் தேதி காலை 10:00 மணியளவில் வீட்டிலிருந்து வெளியே சென்றவர், வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து தந்தை கொடுத்த புகாரின் படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
