/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பள்ளி ஆண்டு விழாவுக்கு ரூ.2,500 நிதி ஒதுக்கீடு குறைந்த தொகையால் ஆசிரியர்கள் திணறல்
/
பள்ளி ஆண்டு விழாவுக்கு ரூ.2,500 நிதி ஒதுக்கீடு குறைந்த தொகையால் ஆசிரியர்கள் திணறல்
பள்ளி ஆண்டு விழாவுக்கு ரூ.2,500 நிதி ஒதுக்கீடு குறைந்த தொகையால் ஆசிரியர்கள் திணறல்
பள்ளி ஆண்டு விழாவுக்கு ரூ.2,500 நிதி ஒதுக்கீடு குறைந்த தொகையால் ஆசிரியர்கள் திணறல்
ADDED : ஜன 09, 2025 07:47 AM
கரூர்: ஒரு பள்ளிக்கு ஆண்டு விழா நடத்த, 2,500 ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்து இருப்பதால், அதை வைத்து எவ்வாறு விழா நடத்துவது என, ஆசிரியர்கள் திணறி வருகின்றனர்.தமிழகத்தில் அரசு தொடக்க, நடுநிலை, மேல்நிலைப் பள்ளி-களில், ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. அதை பள்ளி கல்வி இணையதளத்தில் பதிவு செய்து, அனுப்பவும் பள்ளிகளுக்கு கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. ஆண்டு விழா நடத்தப்படுவதை ஊக்கு-விக்க, அரசின் சார்பில் நிதி ஒதுக்கீடு வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி, 37,576 பள்ளிகளுக்கு, 14.60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதில், 100 மாணவர் எண்ணிக்கை உள்ள, 26,082 பள்ளிகளுக்கு, 2,500 ரூபாய், 101 முதல், 250 மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட, 7,397 பள்ளிக்கு, 4,000 ரூபாய், 251 முதல், 500 மாணவர் எண்ணிக்கை உள்ள, 2,377 பள்ளிகளுக்கு, 8,000 ரூபாய், 501 முதல் 1,000 மாணவர் எண்ணிக்கை கொண்ட, 2,377 பள்ளிகளுக்கு, 15 ஆயிரம் ரூபாய், 1,001 முதல், 2,000 மாணவர்கள் எண்ணிக்கை உள்ள, 327 பள்ளிகளுக்கு, 30 ஆயிரம் ரூபாய், 2,001க்கு மேல் மாணவர்கள் எண்ணிக்கை உள்ள, 45 பள்ளிகளுக்கு, 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. ஆண்டு விழா நடத்த போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்பதால், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் திணறி வருகின்றனர்.
இது குறித்து, அனைத்து முதுகலை ஆசிரியர்கள் சங்க மாநில பொதுச் செயலர் மகேந்திரன் கூறியதாவது:
நடப்பு கல்வியாண்டில், அரையாண்டு நிறைவடைந்துள்ளதால், பல பள்ளிகளிலும் விழாக்கள் கொண்டாட தயாராகி வருகின்-றனர். பள்ளியில் ஆண்டு விழா நடத்த வேண்டும் என்றால், மைக் செட், பந்தல், சிறப்பு விருந்தினருக்கு பொன்னாடை, மாணவர்களுக்கு பரிசு என குறைந்தபட்சம், 7,000 முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும்.
ஆனால், ஒன்று முதல், 250 மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட, 89 சதவீதம் பள்ளிகளுக்கு, 2,500 முதல் 4,000 ரூபாய் வரை கிடைக்கும். இந்த குறைந்தபட்ச தொகையை வைத்து, மாணவர்-களுக்கு பரிசு பொருள் வாங்கவோ, விழா செலவுகளை செய்வ-தற்கோ இயலாத சூழல் உருவாகிவிடும். ஏழை, நடுத்தர மக்கள் படிப்பதால் பெற்றோரிடம் கூட உதவி செய்யும் சூழ்நிலை இல்லை. ஆண்டு விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என்றால், அரசு ஒதுக்கீடு செய்த தொகையை இன்னும் உயர்த்தி வழங்க வேண்டும்.இவ்வாறு கூறினார்.