ADDED : ஜன 13, 2025 03:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை,: குளித்தலை அடுத்த தெலுங்கபட்டி கிராமத்தை சேர்ந்தவர் மருதை மகள் பகவதிஅம்மாள், 26; அப்பகுதியில் உள்ள தனியார் பிரைமரி பள்ளி ஆசிரியை. வழக்கம்போல், கடந்த, 7 காலை, 8:30 மணிக்கு, வீட்டிலிருந்து பள்ளிக்கு பணிக்கு சென்றார். மாலை வீடு திரும்பவில்லை.
நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடியும், விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்க-வில்லை. காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்கோரி, அவரது சித்தப்பா பெரியசாமி, 61, கொடுத்த புகார்படி, தோகை-மலை போலீசார் விசாரிக்கின்றனர்.