/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
/
சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
ADDED : ஜன 20, 2024 01:05 AM
கரூர்:கரூர் மாவட்டம் பாகநத்தம் அருகில் மஞ்சநாயகன்பட்டி சேர்ந்த சூரியபிரகாஷ், 22. இவர் கடந்த, 2022 மே 2ல் புத்தம்பூர் பகவதியம்மன் கோவில் திருவிழாவில், 17 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக, சிறுமியின் பெற்றோர், கரூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். அதன்படி போலீசார், போக்சோ சட்டத்தில் சூரியபிரகாஷை கைது செய்தனர்.
கரூர் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. நீதிபதி நசீமா பானு நேற்று தீர்ப்பளித்தார்.
இதில், சூரியபிரகாஷுக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை, 3,000 ரூபாய் அபராதமும் விதித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, 3 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரைத்தார்.