ADDED : அக் 28, 2024 04:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் டவுன் போலீஸ் எஸ்.ஐ., நாகராஜன் உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம், காமராஜர் மார்க்கெட் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்களை கொண்டு சென்ற-தாக, கிருஷ்ணராயபுரம் பால ராஜபுரத்தை சேர்ந்த கதிர்வேல், 30, என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து, 19.449 கிலோ புகையிலை பொருட்களை, கரூர் டவுன் போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு, 13,680 ரூபாய் ஆகும்.