/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
'நான் வந்துடேன்னு சொல்லு' போஸ்டர் ஒட்டி 'டிரெண்டிங்'
/
'நான் வந்துடேன்னு சொல்லு' போஸ்டர் ஒட்டி 'டிரெண்டிங்'
'நான் வந்துடேன்னு சொல்லு' போஸ்டர் ஒட்டி 'டிரெண்டிங்'
'நான் வந்துடேன்னு சொல்லு' போஸ்டர் ஒட்டி 'டிரெண்டிங்'
ADDED : டிச 03, 2024 01:38 AM
'நான் வந்துடேன்னு சொல்லு'
போஸ்டர் ஒட்டி 'டிரெண்டிங்'
கரூர், டிச. 2-
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையை வரவேற்று, கரூர், பா.ஜ.,வினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதனை சமூக வலைதளங்களில், 'டிரெண்டிங்' செய்து வருகின்றனர்.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, சர்வதேச அரசியல் மேற்படிப்புக்காக, ஆகஸ்ட் இறுதியில் லண்டன் சென்றார். அவர், மூன்று மாதங்களாக அப்படிப்பை பயின்றார். கடந்த சில நாட்களுக்கு முன் படிப்புக்கான சான்றிதழை பெற்றார். இந்நிலையில், துணை முதல்வர் உதயநிதியின் பொறுப்பேற்பு, நடிகர் விஜய் அரசியல் வருகை என பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. இதை அவர் எப்படி கையாளபோகிறார் என்பதை காண, பா.ஜ.,வினர் ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்.இந்நிலையில், நேற்று தமிழகம் திரும்பிய அண்ணாமலைக்கு, சென்னை விமான நிலையம், கோவை விமான நிலையத்தில், அவருக்கு சிறப்பான வரவேற்பளித்தனர். கரூர் மாவட்டத்தில் பா.ஜ.,வினர் சார்பில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். அதில், பா.ஜ., மாவட்ட பொதுச்செயலாளர் கோபிநாத், மத்திய மாநகர தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் சார்பில், அண்ணாமலையை வரவேற்கும் விதமாக, 'நான் வந்துடேன்னு சொல்லு' என்று அச்சடிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களில், 'டிரெண்டிங்' செய்யப்பட்டு வருகிறது.