/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பள்ளப்பட்டி அருகே மத நல்லிணக்கத்தோடு 300 ஆண்டாக நடைபெறும் கோவில் விழா
/
பள்ளப்பட்டி அருகே மத நல்லிணக்கத்தோடு 300 ஆண்டாக நடைபெறும் கோவில் விழா
பள்ளப்பட்டி அருகே மத நல்லிணக்கத்தோடு 300 ஆண்டாக நடைபெறும் கோவில் விழா
பள்ளப்பட்டி அருகே மத நல்லிணக்கத்தோடு 300 ஆண்டாக நடைபெறும் கோவில் விழா
ADDED : ஜூன் 13, 2025 01:57 AM
அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி அருகே உள்ள, சவுந்தராபுரத்தில் உள்ள கோவில் திருவிழாவை முன்னிட்டு அக்னி சட்டி, அலகு குத்தி ஊர்வலமாக சென்ற பக்தர்களுக்கு, சால்வை அணிவித்து தேங்காய், பழம் கொடுத்து இஸ்லாமியர்கள் வரவேற்றனர்.
பள்ளப்பட்டி அடுத்த சவுந்தராபுரம் பகுதியில் வரதராஜர், விநாயகர், மாரியம்மன், காளியம்மன், மாசி பெரியசாமி கோவில் திருவிழா தற்போது நடந்து வருகிறது. பள்ளப்பட்டி சொட்டல் தெருவை சார்ந்த மணியார் வம்சாவளியை சேர்ந்தவர்கள்,
இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு, 300 ஆண்டுகளாக திருவிழாவிற்கு அழைப்பு விடுப்பது வழக்கம்.
இந்நிலையில் நாதஸ்வரத்துடன் இஸ்லாமியர் வீட்டிற்கு சென்று அழைப்பு விடுத்தனர். இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும், ஷேக் அப்துல் காதர் வலியுல்லாஹ் தர்கா சந்தனக்கூடு இரண்டாம் நாளில், இஸ்லாமியர்கள் அவர்களுக்கு அழைப்பு கொடுப்பர். இந்த பாரம்பரிய அழைப்பு இஸ்லாமியர், இந்துக்கள் இடையே மத நல்லிணக்கம், ஒற்றுமையை காட்டுவதாக அமைந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று, பள்ளப்பட்டி பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் சொட்டல் தெரு வழியாக, சவுந்தராபுரம் பொதுமக்கள் அக்னி சட்டி எடுத்து, அலகு குத்தி கோவில் பூசாரி அரிவாள் மேல் நின்றபடி ஊர்வலமாக சென்றனர். அப்போது இஸ்லாமியர்கள் அவர்களுக்கு பூ, பழம், பொன்னாடை கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.
இந்து--இஸ்லாமியர் ஒருவருக்கு ஒருவர் இணைந்து ஆரத்தழுவி தங்களது அன்பை
பரிமாறிக் கொண்டனர். இந்த நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது. இதனை தொடர்ந்து இஸ்லாமியர்கள், இந்துக்கள் என அனைவரும் ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர்.