/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஹிந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து கோவில் குடிபாட்டுக்காரர்கள் ஆர்ப்பாட்டம்

ADDED : ஜன 20, 2024 09:52 AM
குளித்தலை: அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில் வளாகத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறையை கண்டித்து, குடிபாட்டுக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குளித்தலை அடுத்த அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில், ஹிந்து சமய அற நிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இக்கோவில் குடிபாட்டுக்காரர்கள், பரம்பரை பரம்பரையாக திருவிழா காலங்களில் குறிப்பிட்ட இடத்தில் தங்கி வழிபாடு நடத்தி வந்தனர். இந்தாண்டு திருவிழாவையொட்டி, ஹாஸ்பிட்டாஸ் கூரை அமைத்துள்ளனர். ஆனால், கோவிலுக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி கொட்டகை அமைத்துள்ளதாக கூறி, கடந்த ஜன., 4ல் செயல் அலுவலர் உத்தரவுப்படி, கூரையை அகற்றினர்.
இதனை கண்டித்து, சம்பந்தப்பட்ட குடிபாட்டுக்காரர்கள், நேற்று காலை, 11:30 மணிக்கு கோவில் நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் தலைமை வகித்தார். யூனியன் கவுன்சிலர் ராமமூர்த்தி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கஸ்துாரிதங்கராசு உள்ளிட்டோர், கோவில் நிர்வாகத்தை கண்டித்து பேசினர். இதில், 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். குளித்தலை இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.