ADDED : மே 06, 2025 02:08 AM
அ நிறம் | அளவு
கரூர்:
கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், டென்னிஸ் அகாடமியை, துணை முதல்வர் உதயநிதி காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.
இந்த இடத்தை கலெக்டர் தங்கவேல் பார்வையிட்டார். அதன்பின் அவர் கூறியதாவது: இங்கு, 3.67 லட்சம் ரூபாய் மதிப்பில் டென்னிஸ் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவியருக்கு டென்னிஸ் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. தற்போது தேர்வு குழுவால், 20 மாணவர்கள், 12 மாணவியர் தேர்வு பெற்றுள்ளனர். விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு தலா, 2,500 ரூபாய்- மதிப்பிலான விளையாட்டு சீருடை மற்றும் காலணிகள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் குணசேகரன், தடகளப் பயிற்சியாளர் சபரிநாதன், கேலோ இந்தியா ஜூடோ பயிற்றுனர் சண்முகம் உள்பட பலர் பங்கேற்றனர்.
