தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ஜவுளி தொழில் முனைவோர்கள் தொழில்நுட்ப பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

ஜவுளி தொழில் முனைவோர்கள் தொழில்நுட்ப பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

ஜவுளி தொழில் முனைவோர்கள் தொழில்நுட்ப பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்


ADDED : ஜன 28, 2025 07:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 28, 2025 07:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: ஜவுளி தொழில் முனைவோருக்கு, தொழில்நுட்ப பயிற்சி விண்ணப்பக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில், ஜவுளி தொழில் முனைவோர்களுக்கு தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கம் மூலமாக, கோவையில் உள்ள தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சிக் கழகத்தில், தொழில்நுட்ப ஜவுளிகள் தொடர்பான அக்ரோ டெக்ஸ்டைல்ஸ், ஜியோடெக்ஸ்டைல், மொபைல் டெக்ஸ்டைல்ஸ், மெடிக்கல் டெக்ஸ்டைல்ஸ் ஆகிய பிரிவுகளில் குறுகிய கால பயிற்சி, நான்கு நாட்களுக்கு அளிக்கப்படவுள்ளது. பயிற்சி கட்டணத்தை மத்திய, மாநில அரசுகளே வழங்குகின்றன.

இதற்கு, https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdC7dD60BZ5Ogmktv4Wp3rS8IdsmUu_2FatvcxmdXSdanHWZA/viewformvc=0&c=0&w=1&flr=0&pli=1 என்ற இணைய தளத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், பயிற்சி தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மண்டல துணை இயக்குனர் அலுவலகம், துணிநூல் துறை, 30/3, நவலடியான் வளாகம் முதல் தளம், தான்தோன்றிமலை, கரூர்- என்ற முகவரியிலும், rddtextileskarur@gmail.com என்ற, இ.மெயில் விலாசத்திலும், 04324- 299 544, 94446 56445 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us