கரூரில் ஜவுளி சோதனை ஆய்வகம்: மத்திய ஜவுளி அமைச்சர் தகவல்
கரூரில் ஜவுளி சோதனை ஆய்வகம்: மத்திய ஜவுளி அமைச்சர் தகவல்
ADDED : ஜூன் 28, 2026 02:50 AM
கரூர்; ''கரூரில், ஜவுளி சோதனை ஆய்வகம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மத்திய ஜவுளி துறை அமைச்சர் கிரிராஜ் சிங் பேசினார்.
கரூரில், மாவட்ட ஏற்றுமதி மற்றும் உற்பத்தி-யாளர் சங்கத்தின், 50வது ஆண்டு விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்யற, மத்திய ஜவுளி துறை அமைச்சர் கிரிராஜ் சிங் பேசியதாவது:கரூரில் நடக்கும் ஜவுளி உற்பத்தியில், 70 சத-வீதம் ஏற்றுமதி, 30 சதவீதம் உள்ளூரில் விற்பனை செய்வதாக கூறினர். இந்த மாவட்ட ஜவுளி பொருட்களுக்கு ஐரோப்பா, அமெரிக்க நாடுகளில் தேவை இருக்கிறது.
மேலும் ஏற்றுமதியை அதிகரிக்க முயற்சி செய்ய வேண்டும். சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் ஜவுளி உற்பத்தி செய்ய வேண்டும். ஜவுளி தொடர்பான சோதனைகளுக்கு திருப்பூர், குருகிராம் ஆகிய இடங்களில் உள்ள ஆய்வகத்-திற்கு செல்ல வேண்டியுள்ளது என்று தெரிவித்-தனர்.
எனவே, கரூரில் ஜவுளி சோதனை ஆய்வகம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பிரதமர் மோடி பொறுப்பேற்ற போது, 10 நாடுகளில் வரி-யில்லா வர்த்தக ஒப்பந்தம் இருந்தது. தற்போது, 56 நாடுகளில் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் ஏற்-படுத்தப்பட்டுள்ளதால், மற்ற நாடுகளுடன் போட்-டியிட்டு ஏற்றுமதி அதிகரிக்க முடியும்.
இந்தியாவில் ஜவுளி தொழிலில் சந்தையின் மதிப்பை, 2030-ம் ஆண்டில், 350 பில்லியன் டால-ராக உயர்த்த இலக்கு வைத்து பணி செய்து கொண்டு இருக்கிறோம். இதில், 250 பில்லியன் டாலர் உள்நாட்டிலும், 100 பில்லியன் டாலர் ஏற்-றுமதியிலும் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. உலக அளவிலான போட்டி, பிராண்டிங் போன்ற-வற்றில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. ஜவுளி தொழில் நுட்பம், பொருட்களின் அடக்க விலை ஆகியவற்றில் மூலம் உலக சந்தையில் போட்டியிட முடியும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
கூட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன் ராஜா, பால்வள மேம்பாட்டு துறை அமைச்சர் விஜய-லட்சுமி, மத்திய ஜவுளித்துறை கமிஷனர் பீனா, கரூர் காங்., எம்.பி.,ஜோதிமணி, கிருஷ்ணராய-புரம் த.வெ.க., எம்.எல்.ஏ., சத்யா, மாவட்ட ஏற்று-மதி மற்றும் உற்பத்தியாளர் சங்க மாவட்ட தலைவர் கோபாலகிருஷணன் உள்பட பலர் பங்-கேற்றனர்.
