/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சின்னதாராபுரம் அருகே வீட்டில் தங்கநகை அபேஸ்
/
சின்னதாராபுரம் அருகே வீட்டில் தங்கநகை அபேஸ்
ADDED : செப் 29, 2024 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னதாராபுரம் அருகே
வீட்டில் தங்கநகை அபேஸ்
கரூர், செப். 29-
கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் இலவனுார் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகள் தமிழரசி, 60; இவர் கடந்த, 24 மதியம் வீட்டுக்கு வெளியில், துணிகளை காய வைத்து கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து சென்று பார்த்த போது, வீட்டின் அலமாரியில் வைக்கப்பட்டிருந்த, ஆறு பவுன் தங்க செயினை காணவில்லை. இதுகுறித்து, தமிழரசி கொடுத்த புகாரின்படி, சின்னதாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.