/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வாடகை கட்டடத்தில் இயங்கும் தான்தோன்றிமலை போலீஸ் ஸ்டேஷன்
/
வாடகை கட்டடத்தில் இயங்கும் தான்தோன்றிமலை போலீஸ் ஸ்டேஷன்
வாடகை கட்டடத்தில் இயங்கும் தான்தோன்றிமலை போலீஸ் ஸ்டேஷன்
வாடகை கட்டடத்தில் இயங்கும் தான்தோன்றிமலை போலீஸ் ஸ்டேஷன்
ADDED : ஏப் 14, 2025 07:07 AM
கரூர்: கரூர் அருகே, வாடகை கட்டடத்தில், சிறிய இடத்தில் போலீஸ் ஸ்டேஷன் செயல்பட்டு வருவதால், போலீசார், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கடந்த, 2018 நவ., மாதம், அ.தி.மு.க., ஆட்சியில் பசுபதிபாளையம் போலீஸ் ஸ்டேஷன், இரண்டாக பிரிக்கப்பட்டு தான்தோன்றிமலை பெயரில் புதிய ஸ்டேஷன் உருவாக்கப்பட்டது. அதற்காக, கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் பின்புறம், தனியாருக்கு சொந்தமான மடத்தில், தான்தோன்றிமலை போலீஸ் ஸ்டேஷன் செயல்பட்டு வருகிறது. அதில், எஸ்.ஐ., தலைமையில், 30க்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றி வருகின்றனர்.
தான்தோன்றிமலை போலீஸ் ஸ்டேஷன் புதிதாக உருவாக்கப்பட்டு, நான்காண்டுகளுக்கு மேல் ஆன நிலையில், வாடகை கட்டடத்தில் குறுகிய இடத்தில் செயல்படுகிறது. அதில், பதிவேடுகள் அறை, கைதிகள் அறை தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவை, போதிய பாதுகாப்பின்றி உள்ளது. மேலும், போலீசாரால் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள், சாலையில் நிறுத்தப்பட்டுள்ளது. குறுகியஇடத்தில் உள்ள தனியார் மடத்தில் பணிபுரிய முடியாமல் போலீசார் அவதிப்படுகின்றனர்.
குறிப்பாக, பெண் போலீசாருக்கு, சுகாதாரமான கழிப்பிட வசதிகள் இல்லை. புகார் கொடுக்க வரும், பொதுமக்களுக்கும் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. எனவே, கடந்த, ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை கட்டடத்தில், இயங்கி வரும் தான்தோன்றிமலை போலீஸ் ஸ்டேஷனை, வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் அல்லது விரைவாக புதிய போலீஸ் ஸ்டேஷன் கட்ட, கரூர் மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

