/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ராஜவாய்க்காலில் முளைத்த ஆகாய தாமரை; செடிகளை அகற்ற விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
ராஜவாய்க்காலில் முளைத்த ஆகாய தாமரை; செடிகளை அகற்ற விவசாயிகள் எதிர்பார்ப்பு
ராஜவாய்க்காலில் முளைத்த ஆகாய தாமரை; செடிகளை அகற்ற விவசாயிகள் எதிர்பார்ப்பு
ராஜவாய்க்காலில் முளைத்த ஆகாய தாமரை; செடிகளை அகற்ற விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : செப் 30, 2024 06:35 AM
கரூர்: கரூர்-வாங்கல் சாலையின் குறுக்கே செல்லும், கிழக்கு பகுதி ராஜவாய்க்காலில் முளைத்துள்ள, ஆகாய தாமரை செடிகளை அகற்றி துார் வார வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
அமராவதி ஆற்றின் கிளை வாய்க்காலாக உள்ள, கிழக்கு பகுதி ராஜவாய்க்கால், கரூர்-வாங்கல் சாலையின் குறுக்கே செல்கிறது. அதன் மூலம், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந் நிலையில், திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் இருந்து, சம்பா சாகுபடிக்காக நேற்று முன்தினம், தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
ஆனால், கிழக்கு பகுதி ராஜ வாய்க்காலில் அதிகளவில் ஆகாய தாமரை செடிகள் முளைத்துள்ளது. இந்த வகையான செடி, அதிகளவில் தண்ணீரை இழுத்து ஆவியாக்கும் திறன் கொண்டது. மேலும், பல இடங்களில் குப்பை கழிவுகள் தேங்கியுள்ளது. இதனால், அமராவதி ஆற்றில் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், கடை மடை பகுதிகளுக்கு தண்ணீர் முழுமையாக சென்று சேர வாய்ப்பில்லை.
கடந்த, 2020ல், அ.தி.மு.க., ஆட்சியின் போது, குடிமராமத்து திட்டத்தின் கீழ், 30 லட்ச ரூபாய் செலவில் துார்வாரப்பட்டது. ஆனால், மழை காரணமாக மீண்டும் ராஜ வாய்க்காலில், ஆகாய தாமரை செடிகள் முளைத்து, தண்ணீர் செல்வதற்கு இடையூறாக உள்ளது. எனவே, அமராவதி ஆற்றில் இருந்து அதிகப்படியான தண்ணீர் திறக்கும் முன், கரூர்-வாங்கல் சாலையின் குறுக்கே செல்லும், ராஜவாய்க்காலை துார் வார, பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

