/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
'நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வைப்பதே மாதிரி பள்ளியின் நோக்கம்'
/
'நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வைப்பதே மாதிரி பள்ளியின் நோக்கம்'
'நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வைப்பதே மாதிரி பள்ளியின் நோக்கம்'
'நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வைப்பதே மாதிரி பள்ளியின் நோக்கம்'
ADDED : ஜூலை 05, 2024 12:56 AM
கரூர்: ''நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வைப்பதே அரசு மாதிரி பள்-ளியின் நோக்கமாகும்,'' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.கிருஷ்ணராயபுரம் அருகில் மாயனுார் அரசு மாதிரிப்பள்ளியில், புலரி முற்றம் என்ற நிகழ்ச்சி நடந்தது.
இதில் பங்கேற்ற கலெக்டர் தங்கவேல் பேசியதாவது:புலரி முற்றம் என்ற நிகழ்வு, அனைத்து மாவட்டங்களில் உள்ள மாதிரி பள்ளிகளின் தலைமையாசிரியர்களை ஒன்றாக ஒரே இடத்தில் குழுவாக அமைத்து, பள்ளியின் வளர்ச்சி மற்றும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்கான கலந்து உரை-யாடல் கூட்டமாகும். தமிழ்நாட்டில் உள்ள, 38 மாதிரி பள்ளி-களின் தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். படிப்பு மட்டுமின்றி மாணவர்களின் அனைத்து திறன்கள் வெளிக்-கொண்டு வரமுயற்சித்தல், பொதுத்தேர்வு மட்டுமின்றி போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்து, மாணவர்கள் இடைநிற்றலை குறைக்கவும் முயற்சி செய்ய வேண்டும். அரசு பள்ளிகளில் படிக்கும் சிறந்த மாணவர்களை தேர்ந்தெடுத்து, உண்டு உறைவிடத்துடன் கூடிய தரமான சிறந்த ஆசிரியர்களை கொண்டு, கல்வி போதிப்பதற்காக இப்பள்ளி தொடங்கப்பட்டது. பள்ளி ஆசிரியர்கள் தங்களுடைய பணியின் மகத்துவத்துவத்தை உணர்ந்து செயல்பட வேண்டும். மாணவர்கள் உயர்ந்த கல்வி நிறு-வனங்களில் பயில்வதற்காக, நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வைப்பதே, கரூர் மாவட்ட அரசு மாதிரி பள்ளியின் நோக்க-மாகும். இவ்வாறு பேசினார்.இதையடுத்து, கிருஷ்ணராயபுரம் கூட்டுறவு சங்க ரேஷன் கடையில், பொது மக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் தரம், இருப்பு குறித்து கலெக்டர் தங்கவேல் ஆய்வு செய்தார்.