/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மின்கம்பத்தின் அடிப்பகுதி முறிந்தது புதிதாக அமைக்க வலியுறுத்தல்
/
மின்கம்பத்தின் அடிப்பகுதி முறிந்தது புதிதாக அமைக்க வலியுறுத்தல்
மின்கம்பத்தின் அடிப்பகுதி முறிந்தது புதிதாக அமைக்க வலியுறுத்தல்
மின்கம்பத்தின் அடிப்பகுதி முறிந்தது புதிதாக அமைக்க வலியுறுத்தல்
ADDED : மே 22, 2025 01:53 AM
குளித்தலை, குளித்தலை, கொல்லம் பட்டறை தெருவில் மூன்று வழி பாதையில், 40 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருந்து வந்த, இரும்பு தெருவிளக்கு மின் கம்பத்தின் அடிப்பகுதி முறிந்தது.
இந்த கம்பத்தில் தெருவிளக்கு மற்றும் 10க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள், மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில், மின் கம்பம் கீழே விழுந்து பாதிப்பு ஏற்படுத்தாத வகையில், வாழை மரத்திற்கு முட்டு கொடுப்பது போல், மின் கம்பத்திற்கு இரண்டு சவுக்கு மரத்தால் முட்டு கொடுக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில், பைக் மற்றும் வாகனங்களில் வருவோர், மின்கம்பத்தில் மோத வாய்ப்பு உள்ளது.
எனவே, போர்க்கால அடிப்படையில் புதிய மின் கம்பம் அமைத்து, தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.