/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புத்தக திருவிழா நிறைவு ரூ.60 லட்சத்துக்கு விற்பனை
/
புத்தக திருவிழா நிறைவு ரூ.60 லட்சத்துக்கு விற்பனை
ADDED : அக் 14, 2024 05:22 AM
கரூர்: கரூர் பிரேம் மஹாலில், புத்தக திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார்.
அப்போது அவர் பேசியவதாவது: இந்த புத்தக திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள புத்தக அரங்குகள், குறும்பட திரைய-ரங்கம், கோளரங்கம், கலை நிகழ்ச்சிகள் மற்றும் உணவரங்கினை, 90,250 பேர் பார்வையிட்டுள்ளனர். 11 நாள் நடந்த புத்தக திருவி-ழாவில், மொத்தம், 40,300 புத்தகங்கள், 60 லட்சம் ரூபாய் மதிப்பில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.வீடுகளில் சொந்த நுாலகம் அமைத்து பராமரிக்கப்பட்டு வருபவர்-களை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்க-ளுக்கு பரிசளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்து. அந்த வகையில் கரூர் மாவட்டத்தில், 22 பேர் தங்களது இல்லங்களில் சொந்த நுாலகம் வைத்து பராமரித்து வருகின்றனர். அவர்களை மாவட்ட நுாலக அலுவலர் தலைமையில் இல்லங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டபோது, 12,000க்கும் அதிகமான புத்-தகங்களை வைத்து பராமரித்து வரும் கடவூர் மணிமாறனுக்கு, முதல் பரிசை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன பொது மேலாளர் (மனித-வளம்) கலைச்செல்வன், முதன்மை பொது மேலாளர் (இயக்கம்) நாகராஜன், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்-பாளர் சங்க (பபாசி) செயலாளர் முருகன் உள்பட பலர் பங்கேற்-றனர்.